அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படத்தை இன்று சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு போட்டி காட்டினர். படத்தை பார்த்த அவர்கள் யு சான்றிதழ் அளித்துள்ளனர். அதனால் வரி விலக்கு பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை.
முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. அதற்கு முன்பு நடித்த பில்லா 2 படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மங்காத்தாவை தொடர்ந்து ஆரம்பம் படத்திலும் அஜீத் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வருகிறார்.