Your Ad Here

என்னைப் பற்றி வதந்திகள் அமலாபால்


  மலாபால் சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும், டைரக்டர்களிடம் தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கெடுபிடிகள் செய்வதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின.

இந்திப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு அவரை நீக்கி விட்டதாகவும் செய்திகள் பரவின. தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்படும் ரமணா படத்தில்தான் அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டது. தற்போது அவருக்கு பதில் வேறு நாயகியை தேடுகிறார்கள்.

அமலாபால் தற்போது ஜெயம்ரவி ஜோடியாக ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடிக்கிறார். ஒரு மலையாள படமும் ஒரு தெலுங்கு படமும் கைவசம் உள்ளன.

தன்னைப்பற்றி வதந்திகள் பரவுவதாக அமலாபால் ஆவேசப்பட்டார். அவர் கூறும்போது, ”என்னைப்பற்றி தவறான செய்திகள் பரவி வருகின்றன. இந்திப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் வதந்தி பரவி உள்ளது. இந்திப் படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை.

அப்படி இருக்க நான் நீக்கப்பட்டேன் என்று எழுதுகிறார்கள். இது மனத்துக்கு வருத்தமாக இருக்கிறது. தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்