Your Ad Here

என்னையும் கவனத்தில் வச்சிக்கங்க ‘கவர்ச்சி வேடங்களா…


  கதையோடு ஒட்டி வரும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க நான் தயாராகவே இருக்கிறேன் என்கிறார் அமலா பால்.

தலைவா படத்துக்குப் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கில் படு பிசியாக உள்ளார் அமலா பால்.

தனது இந்த முன்னணி இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள அடுத்தடுத்து அதிரடி ஆஃபர்களை தயாரிப்பாளர்களுக்கு வழங்கி வருகிறார்.

முதல் கட்டமாக ஒரு மலையாளப் படத்தில் மகா கவர்ச்சியான வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இதே பாலிசியை தமிழுக்கும் கடைப் பிடிக்கப் போகிறாராம். இதுகுறித்து அமலா பால் கூறுகையில், “கிளாமர் வேடங்கள் எனக்குப் பொருத்தமாக இருப்பதால், கதையோடு ஒட்டி வருவதாக இருக்கும் வேடங்களை ஒப்புக் கொள்கிறேன்.

இதற்கு மொழி பேதமெல்லாம் கிடையாது.

புதுப் புது வேடங்களில், நான் இதுவரை செய்யாத பாத்திரங்களில் நடிக்க விருப்பமாக உள்ளது. துணிச்சலான சாகசங்கள் எனக்கு பிடிக்கும். அந்த மாதிரி வேடங்களையும் எதிர்ப்பார்க்கிறேன்.

சினிமா வாழ்க்கையில் நடிகை ஸ்ரீதேவி கையால் விருது வாங்கியது மறக்க முடியாதது. ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒவ்வொரு வரும் பிரபலமானவர்களை தங்கள் வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர்களை தான் சிறந்த ஆண்களாக கருதுவேன். தன்னம்பிக்கை செயல் திறனும் இருக்க வேண்டும்,” என்றார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்