Your Ad Here

அபிராமிக்கு வாய்ப்பு கொடுத்த கமல்!

கேரளாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணான நடிகை அபிராமி தமிழ் பெண் என்ற காரணத்தினாலேயே கோலிவுட்டில் காலூன்ற முடியாமல் போனது. பிரபு, அர்ஜுன், சரத்குமார் என மூத்த நடிகர்களுடனேயே காலத்தை ஓட்ட வேண்டியதாயிற்று. ஒருகட்டத்தில் வாய்ப்பே இல்லாமல் கன்னடப்பக்கம் ஒதுங்கினார். அங்கிருந்து மீண்டும் மலையாளத்துக்கு போன அபிராமிக்கு கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படம் மறுவாழ்வு கொடுத்தது. அந்த படத்தில் இவரது நடிப்பு பிரமாதமாக இருந்தது. இதனால் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், முன்னணி இயக்குனர் ஒருவருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட அபிராமி, அமெரிக்காவுக்கு பறந்து போனார். பின், மீண்டும் சென்னைக்கு வந்து முகாமிட்ட அபிராமிக்கு தற்போது கமல் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளார். இவர் தற்போது இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தில் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ‘விருமாண்டி’ படத்திற்கு பிறகு கிடைக்காத வாய்ப்பு ‘விஸ்வரூபம்’ மூலமாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இப்படத்தில் நடித்து வருகிறார் அபிராமி.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்