Your Ad Here

என்னது நீச்சல் உடையில் நடிக்கணுமா : நோ சொன்ன காஜல் அகர்வால்

தமிழில் பிரபல நடிகையான காஜல் தமிழில் கார்த்தி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தற்போது விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். நீச்சல் உடையில் நடிப்பது குறித்து கேட்டால் டென்ஷன் ஆகிறார் காஜல். 

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு இந்திய பெண்ணின் முக அம்சம்தான் அதிகம். அதற்கு ஏற்ற கதாபாத்திரங்களைதான் இதுவரை ஏற்று நடித்து வருகிறேன். ஆனாலும் ஒரே பாணியிலான வேடங்களில் நடிப்பதில்லை.

நீச்சல் உடை அணிந்து நடிப்பது எனது உணர்வுகளுக்கு பொருந்தி வராது என்பதால் எனக்கென்று ஒரு எல்லை வகுத்திருக்கிறேன்.

மேலும் எனது குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்க முடியாத படியான எந்தவொரு காட்சியிலும் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறுகிறார் காஜல்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்