நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூருக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூரின் வீட்டில் கடந்தாண்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் திருடு போனது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் 2 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் போனிக்கு யாரோ போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அவர், நீ என் ஆட்களை கைது செய்ய வைத்து விட்டாய், இதற்கான பின்விளைவுகளை நீ சந்திக்க வேண்டும், உன்னை வீட்டில் வைத்தே சுட்டு விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து மும்பை ஓஷிவாரா காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ரவுடி ரவி பூஜாரியின் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்து பேசிய நபரின் குரல் ரவியுடையது போன்று உள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் போனி கபூர் வீடு உள்ள பகுதியில் பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.