Your Ad Here

தமிழில் சன்னி லியோன்


      நடிகை சன்னிலியோன் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.கனடாவை சேர்ந்தவர் சன்னி லியோன். சில பாலியல் படங்களில் நடித்துள்ள அவர், இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பெங்களூர் வந்திருந்த அவர் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரை, வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்தப் படத்தை தயாநிதி அழகிரியின் மீகா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. ஜெய், ஸ்வாதி நடிக்கின்றனர். காமெடி திரில்லர் படமான இதை வெங்கட் பிரபுவின் அசோசியேட் சரவண ராஜன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்போதுதான் சன்னிலியோனை ஒப்பந்தம் செய்தோம். ஒரு பாடலுக்கு அவர் ஆடுகிறார் என்று டிவிட்டரில் தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்