Your Ad Here

ஹீரோயின் வேடத்தில் மட்டும்தான் நடிப்பேன் - அஜீத் நாயகியின் அடம்


     கேரக்டர் வேடம்தான் வருகிறது. அதில் நடிக்க விருப்பமில்லை. ஹீரோயின் வேடம் வந்தால்தான் நடிப்பேன் என்றார் அஜீத்துடன் நடித்த அக்ஷரா கூறினார். ‘ஆரம்பம்‘ படத்தில் அரசியல்வாதி மகளாக நடித்திருப்பவர் அக்ஷரா. அஜீத்துடன் வாக்குவாதம் செய்யும் காட்சியில் நடித்ததால் யார் அந்த நடிகை என்று கோலிவுட்காரர்கள் விசாரிக்க தொடங்கினர். இதுபற்றி அக்ஷராவிடம் கேட்டபோது பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது: பெங்களூரில் மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். அப்போதுதான் எனக்கு அஜீத் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. நடிகையாவது எனது கனவு. அதற்காகவே முதல் முயற்சியாக மாடலிங்கில் ஈடுபட்டேன். அது நிறைவேறி இருக்கிறது. அஜீத்துடன் ‘ஆரம்பம்‘ படத்திற்காக 3 நாட்கள் படகு காட்சியில் நடித்தேன். அவர் ஏற்றிருந்த வேடம் மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது. தமிழில் அடுத்த படம் பற்றி பேசி வருகிறேன். இன்னும் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. குணசித்ர வேடங்களில் நடிக்கவே அதிகளவில் வாய்ப்பு வருகிறது. ஆனால் ஹீரோயின் வேடத்தில் நடிக்கவே எனக்கு விருப்பம்.

குறிப்பிட்ட மொழி படத்தில் மட்டுமே நடிப்பது என்ற கட்டுப்பாடு எதையும் வைத்துக்கொள்ளவில்லை. எல்லா மொழி படங்களிலும் நடிப்பேன். முன்னணி ஹீரோயினாக இடம்பிடித்து திரையுலகை ஆள வேண்டும் என்பது என் ஆசை. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11723&id1=3#sthash.cCYJAUVm.dpuf

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்