பொங்கலுக்கு ஜில்லா! மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் ஜில்லா. தலைவா கொடுத்த இழப்பை சரி செய்து விட வேண்டும் என்பதற்காக இப்படத்தில் அதிக கவனத்துடன் நடித்துள்ளார் விஜய். அதோடு, 7 ஆண்டுகளுக்கு முன்பு அஜீத்தின் ஆழ்வார் படத்துடன் போக்கிரியாக மோதிய விஜய், இந்த முறை அஜீத்தின் வீரத்துடன் ஜில்லா மூலம் பலப்பரீட்சை பார்க்கவும் வரிந்து கட்டி விட்டார்.
அதனால் இந்த பொங்கல் அதிரடி பொங்கலாக இருக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடித் தொடங்கிய அதே நேரத்தில் ரஜினியின் கோச்சடையானும் பொங்கலுக்கு வெளியாவதாக இன்னொரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். ஆனால், இதற்கிடையே, தியேட்டர் பிரச்சினையால் ஏதாவது ஒரு படம் பின்வாங்கும் என்ற சூழ்நிலையும் உருவாகியது.
அது எந்த படமாக இருக்கும் என்பது இன்னும் தெரியாத நிலையில், விஜய்யின் ஜில்லா படத்தின் ஆடியோ வெளியீடு டிசம்பர் 15-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பொங்கல் அன்று ஜில்லா வெளியாவது உறுதி என்று மீண்டும் அப்பட நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விஜய் ரசிகர்கள் பொங்கலை கோலாகலமாக கொண்டாட இப்போதே தயாராகி விட்டனர்.பொங்கலுக்கு ஜில்லா! மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான் என தயாரிப்பாளரும், நடிகருமான வி.டி.வி.கணேஷ் கூறியுள்ளார். தயாரிப்பாளராக இருந்த வி.டி.வி.க...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
யார் கண் பட்டுச்சோ, தொடர்ந்து மொக்கைப் படங்களாக் கொடுத்திட்டு இருக்கிற கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்? ஸ்கூலுக்கு டவுசர் பாக்...
Powered by Blogger.
