Your Ad Here

தெலுங்கு படஅதிபருடன் காஜல் அகர்வால் காதல் முறிவு


  தெலுங்கு பட அதிபருடனான காதலை காஜல் அகர்வால் முறித்துள்ளார். இனிமேல் தெலுங்கு படங்களில் நடிப்பதில்லை என்றும் முடிவு எடுத்துள்ளாராம்.

காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ், படங்களில் பிசியாக நடிக்கிறார். கார்த்தியுடன் இவர் நடித்த ‘ஆல் இன் அழகுராஜா’ தீபாவளிக்கு ரிலீசானது. தற்போது விஜய் ஜோடியாக ‘ஜில்லா’ படத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கலுக்கு வருகிறது. மேலும் சில தமிழ் படங்களுக்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.

காஜல் அகர்வாலுக்கும் தெலுங்கு பட அதிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வந்தன.

இந்த நிலையில் தெலுங்கு பட உலகை விட்டு காஜல் அகர்வால் திடீர் என விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடிக்க நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தும் மறுத்து விட்டாராம்.

தமிழ், இந்தியைவிட தெலுங்கில் காஜல் அகர்வாலுக்கு அதிக சம்பளம் கொடுத்தனர். ‘மகதீரா’ போன்ற ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். அப்படிப்பட்ட தெலுங்கு திரையுலகில் இருந்து விலகுவதற்கு படஅதிபருடனான காதல் முறிவே காரணம் என்கின்றனர். தமிழ் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்