Your Ad Here

அமலா பாலுக்கு “அல்வா பாலிவுட்டில் பரபரப்பு


   விஜயகாந்த் நடித்த “ரமணா” படம், “காப்பர்” என்ற பெயரில், இந்தியில் தயாராகிறது. அக் ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இதில் தமிழில் சிம்ரன் நடித்திருந்த வேடத்தில் நடிக்க, முதலில் அமலா பாலை தான் பேசினார்களாம்.

இதனால், படு உற்சாகத்துடன் மும்பை சென்று போட்டோ செஷனில் கலந்து கொண்ட அமலா பால், அழைப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால், படத்தின் வியாபாரம் கருதி, அந்த வேடத்துக்கு கத்ரீனா கைப்பை புக் செய்து விட்டதாக செய்தி தான் வந்ததாம்.

இதனால், அதிர்ச்சிக்கு ஆளான அமலா பால், தமிழ், தெலுங்கு, மொழிகளில், பெரிய அளவில் படங்கள் இல்லாததால், தன் தாய்மொழியான மலையாளத்தில் தஞ்சமடைந்துள்ளார். “இந்தியில் முதல் வாய்ப்பே நழுவிப்போனதால், இனி இந்திப் பட வாய்ப்பு தேடி வந்தாலும் ஏற்க மாட்டேன்” என, புலம்பிக் கொண்டிருக்கிறாராம் .

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்