Your Ad Here

சூர்யா கொடுத்த 10 கோடி!


  சூர்யாவை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் இயக்குனர் வசந்த். பிற்காலத்தில் சூர்யாவிடம் போய் கால்ஷீட் கேட்டார் வசந்த்.

அந்த சமயத்தில் வசந்த் வீட்டுக்கு தேடிப்போன சூர்யா, ‘நீங்கள் என்னை இயக்கும் சூழ்நிலை இப்போது இல்லை. தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் என்னை இயக்கி வெளியிட்டால் என்ன லாபம் கிடைக்குமோ... அதை இப்போதே வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று ஒரு பெருந்தொகையைக் கொடுத்தாராம்.

மறுபடியும் அதுபோல ஒரு சம்பவம் தற்போது நடந்திருக்கிறது. சூர்யாவை வைத்து கெளதம் மேனன் இயக்குவதாக இருந்த 'துருவ நட்சத்திரம்' படம் டிராப்பானது எல்லாருக்கும் தெரிந்த கதை.

இருந்தாலும், கெளதம் மேனனுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய முடிவு செய்தாராம் சூர்யா. இதனால், சூர்யாவைத் தேடிப்போன கெளதமுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

'துருவ நட்சத்திரம்' படத்துக்காக 5 கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கியிருந்தார் சூர்யா. அந்த படத்தில் இருந்து விலகி விட்டதால், அட்வான்ஸ் தொகையுடன் 5 கோடி ரூபாஎ சேர்த்து 10 கோடியாக கெளதம் மேனனிடம் கொடுத்திருக்கிறார் சூர்யா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்