Your Ad Here

அஜீத்துடன் ஜோடி சேர விரும்பும் மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை!

இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனையான அலிஷா அப்துல்லா, இந்தியாவிற்காக மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் ஒரேயொரு வீராங்கனை என்ற பெருமையை கொண்டவர். 

இளம் வயதிலேயே ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். இவருக்கு தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

உண்மையில் திரைத்துறையில் நுழையும் எண்ணம் இருக்கிறதா? என்று அலிஷாவிடம் கேட்டபோது, திரைத்துறைக்கு வர விருப்பம் இருக்கிறது. 


அவ்வாறு நடிக்க வந்தால் அஜீத்துடன் இணைந்து நடிக்கவே விரும்புகிறேன்.

அஜீத்தும் ஒரு மோட்டார் சைக்கிள் பந்தய வீரர். அவரால்தான் என்னை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்று கூறுகிறார். இவரது கனவு நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆரம்பம்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. தற்போது ‘வீரம்’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்